சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும், மீதமுள்ள இடங்களில் பாஜகவிற்கு 30, பாமகவிற்கு 23 மற்றும் டிடிவி தினகரனுக்கு 6 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்குப் போட்டியாக, திமுக தரப்பில் தென் மாவட்டங்களில் கணிசமாக உள்ள முக்குலத்தோர் மற்றும் முத்தரையர் சமூக மக்களின் 80 சதவீத வாக்குகளைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான தேர்தல் வியூகங்களை அக்கட்சி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
