தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற உலக தாய்மொழி தினவிழா மற்றும் ரத்ததான முகாமில் கலந்துகொண்ட திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன், ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முன்னாள் முதல்வரான ஓபிஎஸ், மாற்றுக் கட்சித் தலைவரான முதலமைச்சர் ஸ்டாலினைப் பாராட்டிப் பேசியது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த அவர், ஒருவேளை ஓபிஎஸ் திமுகவில் இணைந்தால் அது தமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும் என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்தபோது ஒருவருக்கொருவர் கடும் அரசியல் எதிரிகளாகச் செயல்பட்டவர்கள் ஓபிஎஸ் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன்.
தற்போது திமுகவில் எம்பியாக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன், தனது பழைய அரசியல் எதிரியான ஓபிஎஸ்ஸை திமுகவிற்கு வரவேற்கும் விதமாகப் பேசியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தத் திடீர் அழைப்பு அதிமுக மற்றும் ஓபிஎஸ் தரப்பினரிடையே விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
