நாமக்கல் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய ஏராளமானோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நாமக்கல்லில் ஆலம்பாளையம் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கட்சியில் சேர்ந்தனர்.
அவர்களுக்கு அதிமுக துண்டு அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அடுத்தடுத்து நடைபெறும் இந்த இணைப்பு படலம் அக்கட்சியினர் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
