ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பொதுமக்கள் தங்களது கைகளில் கடப்பாரையை எடுத்து அதிரடியாகச் சுவரை இடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள முக்கிய ஓடை ஒன்றை தனிநபர் ஒருவர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துச் சுவர் எழுப்பியுள்ளார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

​இதனால் தீவிர ஆத்திரமடைந்த கிராம மக்கள், தங்களுக்குள் ஒன்று திரண்டு கடப்பாரையுடன் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த ஆக்கிரமிப்புச் சுவரை அக்குவேறு ஆணிவேறாக இடித்துத் தரைமட்டமாக்கினர். அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் பொதுமக்கள் தாங்களாகவே களமிறங்கி ஆக்கிரமிப்பை அகற்றிய இந்த அதிரடி வீடியோ, தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.