நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் வில்லி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். குறிப்பாக வில்லியாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.  சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், பாய்ஸ், காதல் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்புகளை தான் மிஸ் செய்ததாக வருத்தம் தெரிவித்த அவர், அதற்கு தன்னுடைய தந்தை தான் காரணம் என்றும் அவருக்கு தான் நடிப்பதில் விருப்பம் இல்லாததால் அனுமதிக்கவில்லை என்றும் கூறினார்.