சமூக ஊடகங்களில் ஒரு பூனை–எலி மோதல் காட்சி வைரலாகி, நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பையும் சிரிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக பூனைக்குப் பிடித்த உணவு என்றால் எலி தான். “டாம் அண்ட் ஜெர்ரி” கார்டூனில் பார்க்கும் ஓட்டப்பந்தயமே நிஜ வாழ்க்கையிலும் நடந்ததுபோல் இந்த காணொளி உள்ளது. ஆனால் இந்த வீடியோவில் காட்சி தலைகீழாக மாறியுள்ளது.
படிக்கட்டுகளுக்கு இடையில் சுலபமாக அமர்ந்திருந்த பூனை முன், ஒரு சிறிய எலி நின்று “அண்ணே… மன்னிச்சுறுங்க… இனி உங்க வழியுலயே வர மாட்டேன்!” என்று கதறுவது போல நடுங்கிக் கொண்டது. பூனை தன் காலால் அதை தப்பிக்காதபடி பிடித்துக் கொண்டிருந்தது. எலியின் முகத்தைக் கண்டால், “இந்த உயிரையே விட்டுட்டு போங்கடா சாமி!” என்று கூறுவது போலத் தோன்றுகிறது.
A mouse literally begging for its lifepic.twitter.com/ePMljeX6xl
— Massimo (@Rainmaker1973) December 7, 2025
இந்த சம்பவத்தைக் கண்ட நெட்டிசன்கள், “இது கார்ட்டூன்ல பாத்த மாதிரி இல்லை… நிஜமா நடக்குது!” என்று ஆச்சரியப்படுகின்றனர். சமூக ஊடகத்தில் @Rainmaker1973 என்ற பயனர், “ஒரு எலி உண்மையில் அதன் உயிருக்காக கெஞ்சுகிறது” என்று தலைப்பிட்டுப் பகிர்ந்த இந்த 20 விநாடி வீடியோ ஏற்கனவே 30,000 பார்வைகளைத் தாண்டியுள்ளது.
ஒரு பயனர், “ஜெர்ரி சலிச்சுட்டான் போல… டாம், போய் ஓடடா!” என நகைச்சுவையாக கருத்து பதிவு செய்துள்ளார். மற்றொருவர், “இப்படியொரு காட்சி வாழ்க்கையிலே பார்க்கவே இல்லை” என ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். பூனை எலியைத் துரத்துவது சாதாரணம்; ஆனால் எலி பூனையின் முன் நிற்க, “செத்தாலும் சாவதில்லை… காப்பாத்துங்க” என வேண்டுவது போன்ற இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் பலரும், “இது கார்ட்டூன் உலகத்தை விட வேடிக்கையாக இருக்கிறது!” என்று கருத்து தெரிவித்து, காணொளியை காமெடி மீம்களாக பகிர்ந்து வருகிறார்கள்.
