உத்தரப் பிரதேச மாநிலம் தேவ்ரியா மாவட்டம் மதன்பூர் பகுதியில், 19 வயது இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடுமை ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. கடந்த மார்ச் 9-ம் தேதி, கஞ்சன் யாதவ் என்ற அந்தப் பெண் தனது வயலுக்குச் சென்றபோது, அதே ஊரைச் சேர்ந்த ஷாஹித், தில்ஷாத் மற்றும் அவர்களது நண்பர்கள் 4 பேர் கொண்ட கும்பல் அவரைச் சூழ்ந்துகொண்டுள்ளது. அந்தப் பெண்ணைத் தனியாகப் பார்த்த அந்த கும்பல், அநாகரீகமாக நடந்துகொண்டதுடன், அவரைத் தரதரவென அருகில் இருந்த தோப்பிற்குள் இழுத்துச் செல்ல முயன்றுள்ளனர். “அண்ணா.. என்னை விட்டுவிடுங்கள்” என்று அந்தப் பெண் கதறியும், அந்தக் கும்பல் இரக்கமின்றி அத்துமீறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​இந்தக் கொடூரச் செயலை எதிர்த்த அந்தப் பெண்ணிடம், “வீட்டில் சொன்னால் உன்னைக் கொலை செய்துவிடுவோம்” என்றும், அசிங்கமான வீடியோவை எடுத்து வைரல் செய்துவிடுவோம் என்றும் அந்த கும்பல் மிரட்டியுள்ளது. எப்படியோ தப்பித்து வீடு திரும்பிய அந்தப் பெண், நடந்தவற்றைத் தனது தந்தையிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து தந்தை உமேஷ் யாதவ் மதன்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் ஷாஹித் மற்றும் தில்ஷாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டப்பகலில் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த இந்த அநீதி, அப்பகுதியில் பெரும் வகுப்புவாதப் பதற்றத்தையும், மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.