உத்தரப் பிரதேசத்தில் காதலை மறுத்த மைனர் சிறுமிக்கு எதிராக அரங்கேற்றப்பட்டுள்ள ஒரு மிருகத்தனமான சம்பவம் ஒட்டுமொத்த பொதுமக்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 24 வயது வாலிபர் ஒருவன், 17 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி அவளைத் திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளான். ஆனால், அந்தச் சிறுமியோ, “நீ எனக்கு சகோதரன் முறை, உன் மீது எனக்குக் காதல் இல்லை” என்று அவனது விருப்பத்தை நாசூக்காக மறுத்துள்ளாள்.

அண்ணன் என்று சொன்னதால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்த வாலிபர், அச்சிறுமியைப் பழிவாங்கக் கொடூரத் திட்டம் தீட்டியுள்ளான். ​பெண் என்றும் பாராமல் அந்தச் சிறுமியைப் பலவந்தமாக இழுத்துச் சென்று மரத்தில் கட்டிப்போட்டு, யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வக்கிரத்தனமான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான்.

அந்த வெறிபிடித்த வாலிபர், சிறுமியின் மார்பகக் காம்புகளைக் கடித்துத் துப்பிய கொடூரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், அந்த வாலிபரை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய மிருகத்தனமான செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பயத்தையும், கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.