மத்தியப் பிரதேச மாநிலம் போபால் கடாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள பாக் முகாலியா எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்து வந்தவர் திவிஷா சர்மா. இவர் ஓய்வு பெற்ற பெண் நீதிபதி கிரிபாலா சிங்கின் மருமகளும், சமர்த் சிங்கின் மனைவியும் ஆவார். கடந்த டிசம்பர் 12, 2025 அன்று தான் இவருக்குத் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த மே 12-ஆம் தேதி இரவு திவிஷா தனது வீட்டின் மொட்டை மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் ஆன சில மாதங்களிலேயே அவர் இந்த முடிவை எடுத்ததற்குக் காரணம், அவரது கணவர் மற்றும் மாமியாரின் கடுமையான மன ரீதியான மற்றும் உடல் ரீதியான சித்திரவதையே என்று திவிஷாவின் பெற்றோர் கதறி அழுது குற்றம் சாட்டியுள்ளனர். இது தற்கொலை அல்ல, கொலை என்று அவர்கள் பகிரங்கமாகப் புகார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, திவிஷா தற்கொலை செய்வதற்கு முன்பாகத் தனது தோழி மீனாட்சிக்கு இன்ஸ்டாகிராமில் அனுப்பிய கடைசி குறுஞ்செய்திகள் வெளியாகி நெஞ்சைப் பதறவைத்துள்ளன. அதில், “நான் மாட்டிக்கிட்டேன்டா (மாட்டிக்கொண்டேன்). நீ மட்டும் இதில மாட்டிடாதே! என்னால் அதிகம் பேச முடியாது, சரியான நேரம் வரும்போது கூப்பிடுகிறேன்” எனத் தனது மனக் குமுறலையும் பயத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
Bhopal, Madhya Pradesh: CCTV footage of the Twisha Sharma death case in Bhopal.
(Video Source: Police) pic.twitter.com/CaV6tMT2AS
— IANS (@ians_india) May 18, 2026
ssmsz
SpPsz
P
SsSz
Z
Z
Z
Z
Z
Z
P
Spsp
மேலும், அவர் தற்கொலை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு (மே 5 அன்று) எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சியும் வைரலாகி வருகிறது. அதில் திவிஷா மாடிப் படிக்கட்டுகளில் ஏறிச் செல்வதும், பின்னர் அவரது உடலை மூன்று நபர்கள் கீழே தூக்கி வருவதும் பதிவாகியுள்ளது. அங்கு அவரது மாமியார் கிரிபாலா சிங்கும் நிற்கிறார். இந்த வீடியோவும், சாட்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
