நடிகை சுனைனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போன்ற போட்டோவினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அதில் அவருக்கு ட்ரிப்ஸ் ஏற்றுவதற்கான டியுப்பும், மூக்கில் ஆக்ஸிஜன் செலுத்துவதற்கான டியூப்பும் இணைக்கப் பட்டுள்ளது. எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலை சுனைனா வெளியிடவில்லை. இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சுனைனா நலம்பெற வாழ்த்தி வருகின்றனர்.