உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உணவகம் ஒன்றில் பணிபுரியும் தொழிலாளி, ரொட்டிகள் தயாரிக்கும் போது அதில் எச்சில் துப்பிய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு ஹோட்டலில் தந்தூரி அடுப்பில் ரொட்டிகளைச் சுடும் நபர், ஒவ்வொரு ரொட்டியையும் அடுப்பிற்குள் போடுவதற்கு முன்பு அதில் எச்சில் துப்புவது அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இந்த அருவருப்பான செயல் பொதுமக்களிடையே கடும் கோபத்தையும், சுகாதார சீர்கேடு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை உடனடியாகக் கைது செய்துள்ளனர். உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.
हाथरस: मीट होटल पर थूक लगाकर रोटी सेंकी
➡रोटी सेकने का वीडियो हुआ वायरल
➡लोगों ने वीडियो बनाकर किया वायरल
➡सदर कोतवाली के बादशाह मीट होटल की घटना#Hathras #ViralVideo #MeatHotelIncident @hathraspolice pic.twitter.com/0gV6N6A5Bi— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) January 26, 2026
“>
இந்நிலையில் மக்கள் உண்ணும் உணவில் இத்தகைய தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், உணவகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
