ஜான்சி நகரில் நடந்த ஒரு வியத்தகு சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மனைவியின் காதலனை ஹோட்டலில் பார்த்ததாக நினைத்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர், முற்றிலும் சம்பந்தமில்லாத ஒரு இளைஞனை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவலின்படி, ஒரு பெண்ணின் கணவருக்கு, அவரது மனைவி ஒரு இளைஞனுடன் ஹோட்டலில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் குடும்பத்தினருடன் அங்கு சென்று, மனைவியுடன் இருந்த ஒருவரை அவரது காதலன் என எண்ணி, பொதுமக்கள் முன்னிலையில் அடித்துக் கொடுமைப்படுத்தினார்.
அந்த இளைஞர், சோனு என்ற பிரமோத் ஆர்யா என அடையாளம் காணப்பட்டார். அவர் தனிப்பட்ட வேலைக்காக ஹோட்டலுக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பெண்ணின் கணவரும் குடும்பத்தினரும் தவறாகப் புரிந்துகொண்டு, அவரை இரும்புக் கம்பியால் அடித்து தாக்கினர்.
அடியிலிருந்து காப்பாற்ற சோனுவின் தந்தை மற்றும் சகோதரர் சம்பவ இடத்துக்கு வந்தபோதும், அவர்களையும் அந்தக் குழு கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மூவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக மௌராணிபூர் காவல் நிலையப் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் வித்யாசாகர் சிங் கூறியதாவது, “பாதிக்கப்பட்ட இளைஞரின் புகாரின் பேரில், பெயர் குறிப்பிடப்பட்ட ஐந்து பேர் மற்றும் அடையாளம் தெரியாத மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றார். மேலும் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
https://www.instagram.com/reel/DPx82X_jMO3/?igsh=MWZjZW1ucHY3eXYxbA==
