கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விமானக்கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. சென்னை திருவனந்தபுரம் இடையிலான கட்டணம் ரூ.2,800-லிருந்து சுமார் ரூ.15,000 வரை உயர்ந்துள்ளது. கொச்சி நகருக்கான கட்டணம் ரூ.3,000-லிருந்து சுமார் -ரூ.16,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை – தூத்துக்குடி இடையிலான விமான கட்டணம் ரூ.4,000-லிருந்து ரூ.14,000 வரை உயர்ந்துள்ளது.

சென்னை – மதுரை இடையிலான கட்டணம் ரூ.3,314 லிருந்து ரூ.10,192 முதல் ரூ.17,950 வரை உயர்ந்துள்ளது. சென்னை – கோவை இடையிலான கட்டணம் ரூ.3,315 லிருந்து -ரூ.14,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை – திருச்சி இடையே ரூ.2,579-ஆக இருந்த கட்டணம் ரூ.9,555 வரை உயர்த்தப்பட்டுள்ளது.