தற்போதைய கோடைக்கால வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு விசித்திரமான மற்றும் புதிய வழிகளை முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் தனது டிராக்டரை நகரும் நீச்சல் குளமாக மாற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் டிராக்டரின் மேல் பகுதியில் பெரிய டப் ஒன்றை வைத்து, அதில் தண்ணீர் நிரப்பி, அந்த நபர் அதில் ஜாலியாகப் பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அவர் டிராக்டரில் தண்ணீர் நிரப்பப்பட்ட டப்பிற்குள்ளேயே படுத்துக்கொண்டு பயணிக்கிறார்.

இதனால் பார்ப்பதற்கு இது ஒரு சொகுசு வசதி போலத் தெரிவது மட்டுமின்றி, அந்த நபர் தனது வசதிக்காக அருகே ஒரு நாற்காலியையும் ஏற்பாடு செய்துள்ளார். சுட்டெரிக்கும் வெயிலில் இப்படியொரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்ட அந்த நபரின் இந்த வீடியோ, பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துவதுடன், பலரையும் ரசிக்க வைத்துள்ளது.