சமூக வலைதளங்களில் விலங்குகளின் சுட்டித்தனமான வீடியோக்கள் எப்போதும் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு குட்டி சிங்கத்தின் வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்று வருகிறது. பொதுவாக காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டாலே காடே அதிரும், ஆனால் இந்த வீடியோவில் உள்ள குட்டி சிங்கம் தனது முழு பலத்தையும் திரட்டி கர்ஜிக்க முயற்சிக்கும் காட்சி காண்போரை சிரிக்க வைக்கிறது.

அந்த பிஞ்சு சிங்கத்தின் தொண்டையிலிருந்து வெளிவரும் சத்தம் ஒரு கம்பீரமான கர்ஜனைக்கு பதிலாக, பூனைக்குட்டியின் மெல்லிய ‘மியாவ்’ சத்தத்தைப் போல ஒலிக்கிறது. சுமார் 23 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், ஒரு பெண் சிங்கம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, அதன் அருகே விளையாடும் குட்டி சிங்கம் கர்ஜனை பயிற்சி எடுப்பதைப் பார்க்க முடிகிறது. அதன் மழலை மாறாத சத்தமும், அந்த வயதிலேயே அதற்கு இருக்கும் தன்னம்பிக்கையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.

“>

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் ரசித்துப் பார்த்து வருவதுடன், “பயிற்சிதான் ஒருவரை முழுமையாக்கும்” என்றும், “இவ்வளவு அழகான கர்ஜனையை இதுவரை கேட்டதில்லை” என்றும் அன்புடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தற்போதைக்கு பூனை போல ஒலித்தாலும், எதிர்காலத்தில் ஒரு நாள் இது காட்டை ஆளும் வீரனாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.