சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியா 2 திரைப்படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது படபிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் சிறப்பு சண்டை காட்சிகள் தனுஷ்கோடியில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கமலுடன் சேர்த்து காஜல் அகர்வால், பிரியா பவானிசாகர் மற்றும் ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கக்கூடிய இந்த படத்தில் எழு வில்லன்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வில்லன் கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, ஜெயப்பிரகாஷ், குருசாமி, வெண்ணிலா கிஷோர் மற்றும் சிவாஜி குருவாயூர் ஆகியோர் நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நடித்த காட்சிகள் மாற்றப்படாது என சங்கர் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.