மியோசிட்டிஸ் நோயில் இருந்து குணமடைந்து வரும் சமந்தா, தற்போது பல்வேறு படப்பிட்ப்புகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷூட்டிங்கின் போது அவருக்கு கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

அதை அவர் வலியாக நினைக்காமல், இது தனக்கு கிடைத்த ஒரு பரிசு என்பது போல் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த அர்பணிப்பை திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். சமந்தா தற்போது ‘சிட்டாடல்’ என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.