இயக்குனரான செல்வராகவன் தற்போது பகாசூரன் திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்த  பகாசூரன் திரைப்படம் சென்ற பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீசானது. இத்திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று பிரபலங்கள் பலரும் செல்வராகவனை பாராட்டி வருகின்றார்கள்.

இந்த நிலையில் இயக்குனர் தனது அடுத்த திரைப்படத்தின் ஹீரோவை அறிமுகம் செய்திருக்கின்றார். இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி சார். நீங்களா ஏதாவது கிளப்பி விடாதீங்க. அப்புறம் முக்கியமான ஒரு விஷயம். எனது அடுத்த திரைப்படத்தின் ஹீரோ ரிச்சர்ட் சார் தான். அறிவிப்பு விரைவில் என பதிவிட்டு இருக்கின்றார்.