தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு விவரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி நடிகர் விஜயின் மொத்த சொத்து மதிப்பு 410 கோடி என்று கூறப்படுகிறது. நடிகர் விஜய் ஒரு படத்திற்கு 100 முதல் 120 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார்.

சென்னையில் உள்ள நீலாங்கரை கடற்கரையில் தளபதி விஜயின் பிரம்மாண்ட வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ளது. நடிகர் விஜயின் வீட்டு மதிப்பு சுமார் 70 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜயிடம் ரூ. 6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ் கார், ரூ. 1.30 கோடி மதிப்புள்ள ஆடி ஏ8 கார், ரூ. 75 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ சீரிஸ் 5 கார், ரூ. 80 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ் 6 கார், ரூ. 35 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் வொர்த் கார் போன்றவைகள் இருக்கிறது.