தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சியான் விக்ரம். இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் 2 மற்றும் தங்கலான் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் துருவ நட்சத்திரம் மற்றும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் விக்ரமின் மொத்த சொத்து மதிப்பு குறித்த விபரம் வெளிவந்துள்ளது.

அதன்படி நடிகர் விக்ரமின் மொத்த சொத்து மதிப்பு 148 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. அதன் பிறகு நடிகர் விக்ரமுக்கு சென்னையில் உள்ள ஏஜிஎஸ் காலனியில் பிரமாண்டமான பங்களா வீடு இருக்கிறது. நடிகர் விக்ரம் ஒரு படத்திற்கு சுமார் 20 முதல் 25 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். மேலும் நடிகர் விக்ரமிடம் ரூ. 86 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா land Cruiser prado கார், ரூ. 80 லட்சம் மதிப்புள்ள ஆடி Q7 Quattro கார், 2.75 கோடி மதிப்புள்ள ஆடி ஏ4 கார், ரூ. 3.8 கோடி மதிப்புள்ள porsche 911 Turbo கார் போன்றவைகள் இருக்கிறது.