இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதில் தனஸ்ரீ மாடலிங் செய்து வந்த நிலையில் பின்னர் ஒரு கான்சர்டில் பாடகியாக அறிமுகமானார். இதன் மூலம் ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் அவருக்கு நடன போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தனஸ்ரீ மற்றும் சாஹல் இருவரும் கடந்த 3 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிய போவதாக செய்தி வெளியானது.
ஆனால் இருவரும் அதனை உறுதிப்படுத்தாத நிலையில் தற்போது மும்பை குடும்ப நல நீதிமன்றம் இருவருக்கும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கியதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 18 மாதங்களாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டே தனஸ்ரீ தன்னுடைய பெயரிலிருந்து சாஹல் பெயரை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
