அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிவந்த ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய இளைஞர் அபய் பட்னாலா (32) மாரடைப்பால் காலமானார். உயர் கல்விக்காக 2014-ல் அமெரிக்கா சென்ற இவர், அர்க்கன்சாஸ் மாகாணத்தில் வேலை பார்த்து அங்கேயே வீடு வாங்கி தன் தம்பியுடன் வசித்து வந்தார்.

இவருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஏப்ரலில் இந்தியா திரும்புவதாக இருந்தார்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக கடந்த வெள்ளிக்கிழமை, நவம்பர் 21ஆம் தேதி, அபய்க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

திருமண ஏற்பாடுகளில் இருந்த பெற்றோருக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியை அளித்துள்ளது. அபயின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அவரது தம்பி ராகுல் ஈடுபட்டு வருகிறார்.