உடனடி விநியோக தளமான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் (Swiggy Instamart) ஆர்டர் செய்த முட்டைகளில் ஒரே ஒரு முட்டை மட்டுமே உடைந்திருந்த நிலையில், ஒரு வாடிக்கையாளர் செயற்கை நுண்ணறிவு (AI) கருவியைப் பயன்படுத்தி, அந்தச் சில்லறை இழப்பை முழுவதுமாக நிறுவனத்திடமிருந்து திரும்பப் பெற்றுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த ‘எக்ஸ்’ (X) தளப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர், உடைந்த ஒரு முட்டையின் புகைப்படத்தை கூகுள் ஜெமினி நானோ (Google Gemini Nano) என்ற ஏஐ கருவியில் பதிவிட்டு, அதில் “மேலும் பல விரிசல்களைப் பயன்படுத்து” (‘Apply more cracks’) என்று கட்டளையிட்டுள்ளார். சில நிமிடங்களிலேயே, ஏஐ கருவி அந்த ஒற்றை உடைந்த முட்டையைப் பயன்படுத்தி, ஒரு ட்ரேயில் உள்ள அனைத்து முட்டைகளும் சேதமடைந்ததைப் போன்ற ஒரு மிகத் தத்ரூபமான புகைப்படத்தை உருவாக்கி அளித்துள்ளது.

“>

 

வாடிக்கையாளர் அந்த ஏஐ-எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாமார்ட் ஆதரவுப் பிரிவுக்குப் புகாராக அனுப்பியபோது, நிறுவனம் உடனே அதை ஏற்றுக்கொண்டு, எந்தக் கேள்வியும் கேட்காமல் ₹.245-ஐ முழுவதுமாகத் திரும்பச் செலுத்தியுள்ளது.

“புகைப்படங்கள் நம்பகமானவை என்ற அடிப்படையில் எங்கள் பணத்தைத் திரும்பப் பெறும் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இப்போது ஏஐ மூலம் மோசடி நடப்பது குறித்த எச்சரிக்கை தேவை” என்று பதிவிட்டவர் கூறியுள்ளார்.