ஆகஸ்ட் 15 ஆம் தேதி இன்று சுதந்திர தினம் முன்னிட்டு அரசு விடுமுறை தினத்தை ஒட்டி அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த நேரத்தில் அனைவருக்குள் எழும் ஒரு கேள்வி “அடுத்த அரசு விடுமுறை எப்போது? என்பது தான். அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் 6 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செப்டம்பர் 17 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி மற்றும் செப்டம்பர் 27 ஆம் தேதி மீலாதுன் நபி முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.