இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2007 ஆம் ஆண்டு ஆரியவீர் என்ற மகனும், 2019 வேதாந்த் என்ற மகனும் பிறந்தனர். இந்நிலையில் சேவாக் அவரது மனைவியை பிரிந்து விட்டதாகவும் கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வரும் நிலையில் தற்போது அது உண்மை என கூறப்படுகிறது.
அதாவது தீபாவளியை முன்னிட்டு சேவாக் வெளியிட்ட போட்டோவில் தன்னுடைய தாய் மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை மட்டுமே பதிவிட்டு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். அதோடு அவரது கணக்கில் இருந்து மனைவியின் புகைப்படங்களை நீக்கியுள்ளார். மேலும் இதன்மூலம் இருவரும் பிரிந்து விட்டது உறுதியாக விட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
