தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழலை அடியோடு ஒழிக்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தற்போது மிக அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
“அரசு பணத்தில் ஒரு ரூபாயைக் கூட நான் தொட மாட்டேன்” என உறுதியளித்துள்ள முதலமைச்சர், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் லஞ்சத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் என கெடு விதித்துள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின் நேர்மையான வழியிலேயே அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் செயல்பட்டு வருவதாகவும், கடந்த காலங்களில் எந்தெந்த துறைகளில் எல்லாம் லஞ்சம் தலைவிரித்தாடியதோ, அவை அனைத்தும் இன்னும் 90 நாட்களில் வேரோடு அகற்றப்படும் என்றும் உறுதிபடக் கூறியுள்ளார். லஞ்ச ஒழிப்பு குறித்த முதலமைச்சரின் இந்த ‘கிடுக்கிப்பிடி’ உத்தரவு, அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
