திமுகவின் ஊழல் பட்டியல் இன்று வெளியிடப்படும் என பாஜக அண்ணாமலை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் திமுக தலைவர்களின் ரூ.1,343,170,000,000 (கோடி) சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு மட்டும் ரூ.2010 கோடி சொத்து இருப்பதாகவும், அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என்.நேரு, கனிமொழி, சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியலையும் வெளியிட்டார். மேலும், திமுகவின் சொத்துப் பட்டியல் விவகாரம் தொடர்பாக சிபிஐயில் இன்று புகார் அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்றைய சொத்து பட்டியலை விட அடுத்த திமுக வின் பார்ட் 2 கருப்பு பண பட்டியலில் தமிழகத்தை உலுக்கும் செய்திகள் இருக்கிறது. ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ஊழலுக்கு எதிரான எனது நடைப்பயணம் தொடங்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக உடைய அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். ஸ்டாலினை தொடர்ந்து தற்போது இபிஎஸ் ஐ அண்ணாமலை குறி வைத்துள்ளார்.