மும்பை புறநகர் ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பு என்பது தற்போது பெரும் கேள்விக் குறியாக மாறியுள்ளது. பன்வெல் – சிஎஸ்எம்டி இடையேயான லோக்கல் ரயிலின் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில், போதையில் இருந்த நபர் ஒருவர் சக பயணிகளை ஆபாசமாகத் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த நபர் பயணிகளிடம், “நான் ஏற்கனவே நான்கு பேரை கொலை செய்துள்ளேன், அடுத்தது நீதான்” என்று மிரட்டியதோடு, தடுக்க வந்த முதியவரையும் கொன்றுவிடுவேன் என்று அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மும்பை ரயில்களில் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்வது மிகுந்த கவலையளிக்கிறது. சமீபத்தில், அந்தேரி – போரிவலி இடையே சென்ற லோக்கல் ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில், கதவைத் திறந்து வைப்பது குறித்த வாக்குவாதத்தில் மயங்க் லோஹர் என்ற 22 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

 

“>

அந்தச் சம்பவம் ஏற்படுத்திய காயங்கள் ஆறுவதற்கு முன்பே, தற்போது மீண்டும் ஒரு நபர் பயணிகளை அச்சுறுத்தும் சம்பவம் நடந்துள்ளது. ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல்துறை மற்றும் ரயில்வே நிர்வாகம் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.