சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் ஓடும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டே, தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தில் இருந்து தேங்காய்களைத் திருட முயற்சி செய்கிறார்.
மேலும் ஓடும் பைக்கிலிருந்தபடியே கையை நீட்டி தேங்காய்களைத் திருட முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனத்தின் மீதான கட்டுப்பாடு தளர்ந்து அவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகிறார். வண்டி கீழே விழுந்த பிறகும், அவர் விடாமல் அந்த வாகனத்தின் பின்னால் சிறிது தூரம் ஓடிப் பார்க்கிறார்.
Salary Increase Nahi Ho Rahi
मैंने सोचा आज सब्जी चुरा लूंगा आसानी से, ट्रक में हाथ मारा और सीधा गिर पड़ा सड़क पर!
सब्जी भी नहीं मिली और इज्जत भी चली गई!बाद में वीडियो वायरल हुआ तो देखकर हंसी नहीं रुक रही आप भी देखो… pic.twitter.com/HigsZIPf2b
— Missu Files (@Shikandar92) June 30, 2026
“>
ஆனால், இறுதியில் அவரால் தேங்காயைத் திருட முடியாமல், வெறும் கையோடு அவமானப்பட்டுத் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இவருக்குப் பின்னால் வந்த மற்றொரு வாகன ஓட்டி இந்த முழுச் சம்பவத்தையும் தனது மொபைல் கேமராவில் படம் பிடித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் அந்த நபரின் பேராசை மற்றும் தவறான செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “இது பேராசைக்குக் கிடைத்த சரியான தண்டனை” என்றும், “தேங்காய் கிடைத்ததோ இல்லையோ, ஆனால் இருக்கும் மானம் மரியாதை எல்லாம் போய்விட்டது” என்றும் இணையவாசிகள் அந்த நபரைச் சாடி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
