சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஜோக்கர் படத்தின் இயக்குனர் ராஜூமுருகன் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்த படத்திற்காக தேசிய விருது வென்றுள்ளார். இவருடைய மனைவி ஹேமா. இவர் அந்த குடியிருப்பில் பாலியல் சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பியதாகவும் பராமரிப்பு செலவுக்கான தொகையை கொடுக்க முடியாது என்று கூறியதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஹேமாவுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமான சம்பவங்கள் நடைபெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.
அதாவது சின்னத்திரை நடிகர் விக்ரமன் பெண் வேடமிட்டு அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினார் என்று குற்றசாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக விக்ரமன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் வழக்கறிஞரோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். அவர்கள் படப்பிடிப்பு சம்பந்தமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் அவதூறாக சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டதாகவும் இந்த அவதூறு வீடியோக்களை பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் தாங்கள் வேறு குடியிருப்பில் இருப்பதாகவும் இந்த பிரச்சனை எவ்வாறு உருவானது என்று தங்களுக்கு தெரியாது எனவும் இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விக்ரமன் மற்றும் அவருடைய மனைவி வலியுறுத்தியுள்ளனர்.
