சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2200 வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,20,200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 15,025 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு கிராம் 16,391 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,31,128 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு பத்து ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 375 க்கும் ஒரு கிலோ வெள்ளி 3,75,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
