மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த பொதுவிசாரணையின் போது அசாதாரணமான காட்சி ஒன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
அபிஷேக் சோன்கர் என்பவர், தனது முதல் மனைவி பிரீத்தி வான்ஸ்கரை விவாகரத்து செய்யாமல் மறுபடியும் திருமணம் செய்திருந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரீத்தி, தனது மகனுடன் நேரடியாக எஸ்பி அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார். அங்கு அவரது கணவனும் இரண்டாவது மனைவியுடன் வந்திருந்தபோது, இருவரும் மோதி கடும் வாய்த்தர்க்கம் மோதலில் மாறியது. செருப்பு வீச்சு, தண்ணீர் பாட்டிலால் தாக்குதல் போன்ற பரபரப்பான காட்சிகள் நிகழ்ந்தன.
#WATCH | MP: Women Fight Outside SP Office In Jabalpur After Man Goes For Second Marriage Without Divorcing First Wife#MadhyaPradesh #MPNews #Jabalpur pic.twitter.com/iuTSlPrcMp
— Free Press Madhya Pradesh (@FreePressMP) September 2, 2025
“>
இரண்டு பெண்களும் ஒருவரையொருவர் தலைமுடி இழுத்து, கத்திக்கொண்டு மோதிய இந்த சம்பவம் போலீசாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரீத்தி கூறுகையில், “கணவர் கருத்தடை அறுவைசிகிச்சை செய்ய வைத்த பிறகே என்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை மணந்தார்… இது என்ன நியாயமா?” என கேட்டார். இரண்டாவது மனைவி அதற்கேற்ப, “நான் தான் சட்டப்படி மனைவி… அவரை விட்டுப் பிரியமாட்டேன்” என பகிரங்கமாக தெரிவித்தார்.
அதிர்ச்சியடைந்த போலீசார் இருவரையும் மற்றும் அபிஷேக்கையும் கைது செய்து சிவில் லைன்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த பரபரப்பு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
