இந்தியாவின் பெரு நகரங்களில் ட்ராஃபிக் ஜாம் என்பது தவிர்க்க முடியாத பிரச்னையாக மாறிவிட்டது. டெல்லி, மும்பை, பெங்களூரு, குர்கான், நொய்டா போன்ற இடங்களில் மக்கள் மணிக்கணக்கில் ட்ராஃபிக்கில் சிக்கி தவிக்கின்றனர். இதிலிருந்து தப்பிக்க மக்கள் பலவிதமான யுக்திகளை கையாள்கின்றனர்.
ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ட்ராஃபிக் ஜாம்மில் சிக்கிய ஒருவர், தனது ஸ்கூட்டியை தோளில் தூக்கிக்கொண்டு நடந்து செல்லும் காட்சி இதில் பதிவாகியுள்ளது. இந்த 12 விநாடி வீடியோவை பார்த்தவர்கள், “இது என்ன புது யோசனை!” என்று வியந்து பேசி வருகின்றனர்.
View this post on Instagram
வீடியோவில், சாலையில் கார்கள், பைக்குகள் என நீண்ட வரிசையில் ட்ராஃபிக் ஜாம் காணப்படுகிறது. இதற்கு நடுவே, இரு இளைஞர்கள் தங்கள் ஸ்கூட்டியை தோளில் தூக்கிக்கொண்டு நடப்பதை பார்க்க முடிகிறது.
பொதுவாக, ட்ராஃபிக்கில் சிக்குபவர்கள் இடைவெளி கிடைத்தால் நகர முயற்சி செய்வார்கள், ஆனால் இவர்கள் செய்தது அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. வீடியோவில் தெரியும் வாகனங்களின் நம்பர் பிளேட்களை வைத்து, இது ஹரியானாவின் குர்கான் பகுதியாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.
இந்த வீடியோவை ‘gurgaon_locals’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு பகிர்ந்துள்ளது, இதுவரை ஆயிரக்கணக்கானோர் இதை பார்த்து, “ஹபீபி, குர்கானுக்கு வாங்க!” என்று கமெண்ட் செய்து, தங்கள் வியப்பை பதிவு செய்து வருகின்றனர்.
