ஜிஎஸ்டி வரி மாற்றத்தால், கார்களின் விலையில் பெரும் மாற்றம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தற்போது 1200 சிசி மற்றும் 44000 MM அளவுடைய கார்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 28% ஜிஎஸ்டி வரியை 18% ஆக குறைத்துள்ளது.

இதன் மூலம், ஒரு காரின் விலை ரூ.62,000 வரை குறையக்கூடும் என கண்ணோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கார் நிறுவனங்கள் கூடுதல் ஆஃபர்கள் (Offers) வழங்கினால் விலை மேலும் குறையும் வாய்ப்பு உள்ளது. இந்த புதிய வரி விதிப்பு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலில் வருகிறது என்பதால், புதிய கார் வாங்க விரும்புபவர்கள் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.