இயக்குனர் அருண் மாதேஸ்வரன் டைரக்டில் தனுஷ் இப்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகக்கூடிய இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று (ஜூன் 30) வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.