தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சௌந்தர்யா. குறிப்பாக அவர் நடித்த அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா, தவசி, சொக்கத்தங்கம் ஆகிய படங்கள் ஹிட்டானது. இதையடுத்து தமிழில் பெரும் வெற்றியடைந்த சூர்யவம்சம் படத்தின் ரீமேக் வாயிலாக ஹிந்தியில் நாயகியாக அறிமுகமானார் சௌந்தர்யா.

வெற்றி நாயகியாக வலம் வந்த சௌந்தர்யா சென்ற 2004ம் வருடம் ஏப்ரல் 17ம் தேதி விமான விபத்தில் உயிரிழந்தார். இதற்கிடையில் சௌந்தர்யா கடைசியாக தன் சகோதரரின் மனைவியிடம் 2 விஷயங்களை கேட்டாராம். அதாவது, விமானத்தில் போகும் முன் காட்டன் புடவையும், குங்குமமும் தருமாறு கேட்ட சௌந்தர்யா பின் திரும்பி வரவே இல்லை என அவரின் சகோதரர் மனைவி உருக்கமாக பதிவிட்டு உள்ளார்.