ஷங்கர் டைரக்டில் கமல் இப்போது இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கக்கூடிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் சூட்டிங் பல கட்டங்களாக மும்முரமாக நடந்து இப்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் “இந்தியன் -2” படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது