உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மீரட் கான்ட் ரயில் நிலையத்தில், நடைமேடையில் கார் ஓட்டிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சம்பவத்தின் போது, ரயில் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தபோது அந்த நபர் தனது காரை ரயிலுக்கு அருகே ஓட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் அந்த இளைஞர், காரை நேராக பிளாட்பாரத்தில் ஓட்டியுள்ளார். காரின் பதிவெண் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்ததாக இருக்க, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

சம்பவத்தை தொடர்ந்து, அந்த நபரை மொராதாபாத் GRP காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தெரிவித்ததுபோல், அவர் மீது இந்திய ரயில்வே சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.