பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்களில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு, பயணிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய பிரபல கொள்ளையனை ஒருவழியாகப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நவடிக்கைக்காகப் போலீசாருக்குப் பாராட்டுகள் குவிந்திருக்க வேண்டிய நிலையில், சமூக வலைத்தளங்களில் விவாதம் முற்றிலும் வேறு திசையில் திரும்பியுள்ளது.

இந்த நொடோரியஸ் கொள்ளையனைப் பிடித்த பிறகு, பிரயாக்ராஜ் காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. ஆனால், குற்றவாளியைப் பிடித்த பெருமிதத்தைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, அந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் போலீசாரின் உடற்தகுதி குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

“>

மேலும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த சில போலீஸ் அதிகாரிகளின் உடல்வாகு மற்றும் செயல்பாடுகள், அவர்களின் உடற்தகுதியை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுவது போல் இருந்ததே இந்த விவாதத்திற்குக் காரணம். “தொடர்ந்து ஓடி ஒளியும் குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டிய காவல்துறையினரே இவ்வளவு ‘அன்ஃபிட்’ ஆக இருந்தால், சட்டம் ஒழுங்கை எப்படிப் பாதுகாப்பார்கள்?” என்று பல பயனர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனால் ஒரு பத்தாண்டுகாலக் குற்றவாளியை வீழ்த்திய போலீசாரின் பெரும் சாதனையை, அவர்களின் போதிய உடற்தகுதியின்மை குறித்த விமர்சனங்கள் நிழலாடி மறைத்துவிட்டன. இந்தச் சம்பவம், காவல்துறையினருக்குத் தகுந்த உடற்பயிற்சியும், உடற்தகுதித் தேர்வுகளும் எந்த அளவுக்கு அவசியம் என்பதை மீண்டும் ஒருமுறை விவாதப் பொருளாக்கியுள்ளது.