உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பெண் மருத்துவர் ஒருவரின் துரித நடவடிக்கையாலும் அர்ப்பணிப்பாலும் உயிரிழக்கும் நிலையில் இருந்த ஒரு பச்சிளம் குழந்தை உயிர் பிழைத்த சம்பவம் அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது தன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆயிஷா என்ற பெண்ணிற்குப் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவர் சஹாரன்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த சில நொடிகளில் அந்த குழந்தை சுவாசிக்காமல், எந்த அசைவும் இன்றி இருந்தது. இதனால் மருத்துவமனை ஊழியர்களும் உறவினர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாகச் சிகிச்சையைத் தொடங்கிய பெண் மருத்துவர் ரூமா, முதலில் ஆக்சிஜன் இயந்திரத்தின் உதவியுடன் குழந்தையைச் சுவாசிக்க வைக்க முயற்சி செய்தார். ஆனால், இயந்திரம் மூலமாக எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. காலம் கடத்தினால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த மருத்துவர் ரூமா, ஒரு நொடியும் தாமதிக்காமல் மனிதாபிமானத்துடன் ஒரு முடிவெடுத்தார்.
இயந்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மருத்துவர் ரூமா தனது வாய் மூலம் குழந்தைக்குச் செயற்கை சுவாசம் (Mouth-to-Mouth Resuscitation) அளிக்கத் தொடங்கினார். அதே நேரத்தில் இதய அழுத்தச் சிகிச்சையையும் (CPR) தொடர்ந்து அளித்தார். சுமார் சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு, அந்த அதிசயம் நிகழ்ந்தது. குழந்தை மெல்ல அசைந்து, அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டவுடன், அதுவரை மரண பயத்தில் இருந்த உறவினர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. “குழந்தையை வேறு மருத்துவமனைக்கு மாற்றியிருந்தால், செல்லும் வழியிலேயே உயிரிழந்திருக்க வாய்ப்புண்டு. அதனால்தான் அங்கேயே முடிந்தவரை போராடினேன்” என மருத்துவர் ரூமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அந்தப் பெண் மருத்துவரின் அர்ப்பணிப்பு உணர்வை மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
मौत के मुंह से खींच लाई जिंदगी! महिला डॉक्टर ने लगातार दिया CPR, हारती सांसों में फूंकी जान
ये यूपी के सहारनपुर के एक सामुदायिक स्वास्थ्य केंद्र में तैनात डॉक्टर रूमा हैं. इन्होंने लगातार CPR देकर मासूम की जान बचा ली.
डॉक्टर रूमा ने देखा कि बच्चा सांस नहीं ले पा रहा है. शरीर… pic.twitter.com/peacTCYMNA
— Priya singh (@priyarajputlive) May 14, 2026
