டெல்லி என்.சி.ஆரின் காசியாபாத் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான சாட் கடையில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், கடை ஊழியர் ஒருவர் பெரிய பாத்திரத்தில் உருளைக்கிழங்குகளை வைத்து, தனது கால்களால் மிதித்துச் சுத்தம் செய்வது பதிவாகியுள்ளது.

வீடியோவைப் பதிவு செய்த பெண், தனது தாய் அடிக்கடி இங்குதான் சாட் சாப்பிடுவார் என்றும், அந்த ருசியின் பின்னால் ஒளிந்திருக்கும் அசுத்தமான உண்மையை உலகிற்கு வெளிப்படுத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.​வீடியோவின் இறுதியில், அந்த ஊழியர் காலணிகளுடன் உருளைக்கிழங்கை மிதிப்பதைக் கண்டு பலரும் குமட்டலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தச் சுகாதாரமற்ற செயல் குறித்து உள்ளூர் மக்கள் அன்கூர் விகார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உணவுப் பாதுகாப்புத் துறையினர் இந்தக் கடை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணையவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தெருவோர உணவகங்களின் சுகாதாரத்தை மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாக்கியுள்ளது இந்த வைரல் வீடியோ.