சேலம் மாவட்டம் இராமபுரம் ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 9- ஆம் தேதி சிவகாமிக்கு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் சந்தோஷும் சிவகாமியும் கடந்த 14-ஆம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டதாகவும் மருத்துவ அறிக்கை ஒன்றை உறங்கினர்களிடம் காண்பித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தோஷும் சிவகாமியும் இணைந்து பிறந்து 9 நாட்களே ஆன இரண்டாவது பெண் குழந்தையை 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி போலீசார் விசாரணை நடத்தியதில் தேவராஜ் என்பவர் மூலம் ரஞ்சித் என்பவருக்கு குழந்தையை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் சந்தோஷ், சிவகாமி, தேவராஜ், ரஞ்சித் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.