தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நடிகர்–அரசியல்வாதி விஜய், முதல்வர் மு.க. ஸ்டாலினை “What UNCLE” என விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில், மதுரையில் அமைச்சர் மூர்த்தி ஆதரவாளர்கள் விஜய்யின் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் “What Bro, Over Bro; அடக்கி வாசிங்க Bro” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது திமுகவினரால் பரவலாக பகிரப்பட்டு, விஜயின் பேச்சுக்கு கடுமையான பதிலடியாகக் கருதப்படுகிறது.