உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்கு ஒரு புது வசதியை கொண்டுவந்துள்ளது வாட்ஸ்ஆப்.

அதாவது WhatsApp பயனர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அட்டகாசமான அப்டேட்டை கொண்டுவர உள்ளது. பயனர்கள்  தங்கள் கணக்குகளுக்கு தனித்துவமான பயனர் பெயர்களை (Username) அமைப்பதற்கான புதிய அம்சம் விரைவில் வெளியாகவுள்ளது அதாவது, வாட்ஸ் அப் யூசர்-நேம் (Whatsapp Username) கொண்டு ஒரு தனிநபர் வாட்ஸ் அப் கணக்கை அடையாளம் காண அனுமதிக்கும் அம்சத்தில் வாட்ஸ் அப் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.