AC வெப்ப நிலையை குறைவாக அமைப்பதன் வாயிலாக அறையை வேகமாக குளிர்விக்க அனுமதிக்கிறது என சிலர் நம்புகின்றனர். எனினும் அது அப்படியில்லை. பொதுவாக 24 டிகிரி என்பது மனித உடலுக்கு உகந்த வெப்பநிலை ஆகும். ஆகவே உங்களது ஏசியின் வெப்பநிலையை 24 டிகிரியில் வைத்திருப்பது உங்களது அறையை வசதியாக மாற்றுவது மட்டுமின்றி, ஏசியின் சுமையையும் குறைக்கும்.

இதன் காரணமாக உங்களது ஏசி ஆற்றல் மிகுந்ததாகவும், குறைந்த மின்சார சக்தியை பயன்படுத்துவதாகவும் இருக்கிறது. AC பராமரிப்பு மற்றும் மேலாண்மை இயந்திரத்தின் ஒட்டுமொத்த செயல் திறனை மேம்படுத்த மற்றும் பணத்தை சேமிப்பதற்கு உதவுகிறது. உங்களது ஏசியின் செயல்திறனை அதிகரிக்க குளிர்ந்த காற்று வெளியில் நழுவாமல் இருக்க அனைத்து ஜன்னல்களையும் கதவுகளையும் நன்கு இறுக்கமாக மூடிவைக்க வேண்டும்.