தமிழகத்தில் நேற்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகியுள்ளது. இதனால், இன்று ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், மதுரை, கோவை, கரூரில் வழக்கத்தை விட வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நெல்லை, குமரி உள்பட சில மாவட்டங்களில் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது
