சமூக ஊடகங்களை கலக்கும் ஒரு புதிய நடன வீடியோ தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவில், பாரம்பரிய சேலையில் மிடுக்காக நடனமாடும் இரண்டு இந்திய பெண்கள் மட்டுமின்றி, பின்னணியில் அவர்களைக் படம் பிடிக்கும் ஜப்பானிய கேமராமேனின் நடனமும் இடம் பெற்றுள்ளது.

பெண்கள் பாலிவுட் ஹிட் பாடலான ‘பாடி முஷ்கில்’க்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்தபோது, கேமராமேன் திடீரென தனது கேமராவை கீழே வைத்தபடியே அவர்கள் நடன ஸ்டெப்புகளுடன் தானும் இணைந்து ஆடியதைக் காணலாம். அவர் ஒவ்வொரு அசைவும் மிகுந்த உற்சாகத்துடன் செய்த விதம் பார்ப்பவர்களை கவர்ந்துவிட்டது.

இந்த காட்சி வேறொரு கேமராவில் பதிவாகி, இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் சுஜோ பிலிம் என்ற பக்கத்தில் பகிரப்பட்டதிலிருந்து, குறைந்த நேரத்தில் 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 2 லட்சத்திற்கும் மேலான லைக்குகளை பெற்றுள்ளது. ‘இந்த கேமராமேன் நிகழ்ச்சியை முழுக்க கவர்ந்துவிட்டார்’, ‘அவருடைய ஆட்டம் பெண்களைவிட அதிகம் நன்றாக இருந்தது’ என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போல, ‘நீங்கள் கேமராமேன் மட்டுமல்ல, நடன இயக்குநராகவும் இருக்கலாம் போல’ என்று ஒரு பயனர் எழுதியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Syuzo film (@syuzo_film)

“>

இந்தக் குறும்படத் தொடர் ஒரு கேமராமேனின் எளிய நடன அசைவுகளும், அவரது நேர்த்தியான நடனம்  உலகெங்கும் உள்ள ரசிகர்களை எப்படி கவர முடிகின்றது என்பதை சுட்டிக்காட்டுகிறது. உண்மையில், இந்த வீடியோ உலக அளவில் இந்திய கலாசாரத்தை அழகாக வெளிப்படுத்தியதாகவும் சொல்லலாம்.