ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா கடன் பகுதியில் சுமார் 140 கிலோ மீட்டர் தூரத்திற்கு குரு சடை, முயல், வான், வாழை மற்றும் முள்ளி உள்ளிட்ட 21 தீவுகள் உள்ளன. இது போன்ற தீவுகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அது ஒரு சுற்றுலா தளமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தனியாக படகுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த தீவுகளை பார்ப்பதற்கு மலைத்தீவுகளில் இருக்கும் குட்டி குட்டி தீவுகள் ஞாபகம் வரும். ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் ஏறத்தாழ 66 ஹேக்ட்டர் பரப்பளவில் பறந்து விரிந்து இந்த குருசடை தீவு உள்ளது. படகுகளில் செல்லும்போது ஒரு நபருக்கு 300 ரூபாய் கட்டணம் அறிவிக்கப்படும்.. இந்த இடத்தில் அதிகமான பவளப்பாறைகள் இருப்பதால் இங்கு குழந்தைகள் சென்றால் பயனுள்ளதாக இருக்கும். மேலும் மூலிகை செடிகள் மற்றும் மரங்களைக் கண்டு ரசித்துக்கொண்டே சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மதுக்கரையில் உள்ள கடல்பாசிகளை காண முடியும். அதே சமயம் சுண்ணாம்பு ஆய்வுக்கூடமும் உள்ளது. இவ்வாறு பல வியக்க வைக்கும் அதிசயங்கள் இந்த தீவில் நிறைந்துள்ளன