தமிழ்நாடு முழுவதும் தடையில்லாத மின்சாரத்தை வழங்கும் விதமாகவும் மலிவான விலையில் நுகர்வோருக்கு வழங்கும் வகையிலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழகம் செயல்பட்டு வருகிறது. மேலும் தற்போது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கீட்டு செய்யும் முறை பயன்பாட்டில் உள்ளது. மேலும் 100 யூனிட் வரை பயன்படுத்தினால் கட்டணம் இல்லை என்ற திட்டமும் உள்ளது. இந்த சூழலில் மின்கட்டண கணக்கீட்டில் குளறுபடிகள் ஏற்படுவதாக சமீப காலமாகவே புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சினையை தவிர்க்கும் விதமாக டான்ஜெட்கோ புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளது.

அதாவது வீடுகளில் ப்ளூடூத் மீட்டர்களை பொருத்தி கணக்கெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி அதன் பிறகு இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கு மின்கட்டணம் அதிகமாக வருவதாக புகார் வருகிறதோ அங்கெல்லாம் ப்ளூடூத் மீட்டர்களை பொருத்தி பரிசோதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ப்ளூடூத் மீட்டர்கள் பொருத்தப்பட்டு விட்டால் அதனை ப்ளூடூத் அப்ளிகேஷன் மற்றும் பைபர் ஆப்டிக் போன்றவற்றின் மூலமாக செல்போனிலேயே கண்காணித்துக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செல்போனில் தானாகவே தெரியும் விதமாக தொழில்நுட்ப வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ப்ளூடூத் மீட்டர் திட்டம் மாநில அளவில் விரைவில் படுத்தப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.