தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவின் நடிப்பில் கடைசியாக டாடா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கவின் பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் வருகிற மே மாதம் 10-ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று படத்தின் 2-ம் சிங்கிளான மெலடி பாடலை படக்குழு வெளியிட்டனர். இந்த பாடலில் கவின் பெண் வேடத்தில் நடனம் ஆடியுள்ளார். மேலும் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது.